கிருஷ்ண பகவானின் பிறந்தநாளை குறிக்கும் ஜென்மாஷ்டமி இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்துக்களால் மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணர் பூமியில் அநீதி மற்றும் தீமைகளை முடிவுக்கு கொண்டுவர பிறந்ததை இந்த நாள் குறிக்கிறது. இந்த கொண்டாட்டத்தில் கிருஷ்ண பக்தர்கள் ஒன்று கூடி விரதம் கடைபிடித்து பஜனைகள் பாடி, பூஜைகள் செய்து கிருஷ்ணரை வழிபடுவார்கள். இந்த மகிழ்ச்சிகரமான நாளில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்ப வேண்டிய வாழ்த்து, குறுஞ்செய்தி இங்கு பகிரப்பட்டுள்ளது.
கிருஷ்ணரின் ஆசியை பெற்று உங்கள் வீட்டில் அமைதி நிலவி செல்வ செழிப்பு அதிகரிக்கட்டும். இனிய ஜென்மாஷ்டமி வாழ்த்துகள்
இந்த ஜென்மாஷ்டமி முதல் கிருஷ்ண பகவான் உங்களை நற்பாதையில் வழிநடத்தி வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றி அடைய உதவட்டும்.
கிருஷ்ண பகவானின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடனும் பக்தியுடனும் கொண்டாடி மகிழ்வோம்.
இந்த நன்னாளில் கிருஷ்ண பகவான் உங்கள் வாழ்க்கையில் இருந்து எல்லா கவலைகளையும் நீக்கி வீட்டில் மகிழ்ச்சியை நிரப்பட்டும். இனிய ஜென்மாஷ்டமி!
கிருஷ்ண பகவானின் போதனைகளை நினைவுகூர்ந்து நீதியின் பாதையில் பயணித்து ஜென்மாஷ்டமியைக் கொண்டாடுவோம். இனிய ஜென்மாஷ்டமி…
ஜென்மாஷ்டமி கொண்டாங்கள் உங்கள் இதயத்தை அன்பு, கருணை, மகிழ்ச்சியால் நிரப்பட்டும். இனிய ஜென்மாஷ்டமி வாழ்த்துகள்…
கிருஷ்ண பகவானின் பிறந்தநாளை கொண்டாடும் இத்தருணம் முதல் உங்கள் வாழ்வில் இருள் நீங்கி இன்பம் பயக்கும். இனிய ஜென்மாஷ்டமி
எளிமையுடனும் பக்தியுடனும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு கிருஷ்ணரின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம். அவருடைய போதனைகளை நாம் எப்போதும் பின்பற்றுவோம்.
ஜென்மாஷ்டமி என்பது கிருஷ்ண பகவானின் மனித நேயத்தை நினைவூட்டுவதாகும். அவர் காட்டிய அன்பை உலகிற்கு பரப்புவோம்.
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா…கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே… இனிய கிருஷ்ண ஜென்மாஷ்டமி வாழ்த்துகள்!
ஜென்மாஷ்டமியில் கிருஷ்ண பகவான் காட்டிய சத்திய பாதையில் பயணிக்க வலிமையும் தைரியமும் அளித்திட வழிபடுவோம்.
கிருஷ்ணர் நம் உள்ளத்தில் இருக்கும் வரை நாம் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்!
கிருஷ்ண பகவான் உங்களுடைய கவலைகள் அனைத்தையும் நீக்கி ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியை வழங்கட்டும். இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்!
இந்த நன்னாளில் அனைவரின் வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி நிலவ கிருஷ்ண பகவானை வழிபடுவோம்.
இந்த ஜென்மாஷ்டமியில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிருஷ்ண பகவான் அருள் புரியட்டும். இனிய கிருஷ்ண ஜெயந்தி!