October 15, 2024
எத்தனை அடைப்பு இருந்தாலும்  பயம் வேண்டாம்

எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காயிருக்க பயமேன்!


ஆம் காய்கறி வைத்யமுறையிலின்று அனைத்து நோய்களிலிருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். மாத்திரை மருந்துகள் எவ்வளவு சாப்பிட்டும். பிரசரும் சரி இதயத்துடிப்பும்சரி கொலஸ்ட்ராலும் சரி கட்டுப்பாட்டுக்கே வரராததால் வைத்தியர் ஆலோசனைப்படி தினமும் ஒரு மொந்தன் வாழைக்காயை தோலுடன் சிறு துண்டுகளாகவெட்டி காலை வெறும் வயிற்றில் மென்று தின்றால் இப்பொழுது அனைத்தும் கட்டுப்பாட்டில்


வாழைக்காயின் ரகசியம்;- இதயம் சீராக செயல்பட பொட்டாசியம் (துவர்ப்புச்சத்து மிக அத்தியாவசியமாகிறது. இந்த பொட்டாசியம் கொட்டிக்கிடக்கும் வாழைக்காயை தினம் பச்சையாக மென்றோ அல்லது மிக்சி ஜாரில் நீர் விட்டறைத்து கூழ்மமாகவோ சாப்பிட ஒரு நாளைக்குத்தேவையான பொட்டாசியம் வாழைக்காயின் மூலமே கிடைக்கிறது.வாழைக்காயில் நார்ச்சத்திகம் என்பதாலும் சி வைட்டமின் நிறைந்துள்ளதாலும் சுகருக்கும் மிகச்சிறந்த அருமருந்து இதில் மெக்னீசியம் இருப்பதால் உடலுக்குத்வையான கால்சியம் சத்தை உறிஞ்ச மெக்னீசியம் உதவுவதால் எழும்புக்கும் நல்லது.சி விட்டமினிருப்பதால் நுரையீரலும் வழுப்பெற்று சுத்திசெய்யப்படுகிறது.இதில் 913மிகி பொட்டாசியம் அதீததமென்பதால் கெட்டகொழுப்புகள் கட்டுப்படுத்தப் படுவதோடு இரத்த அழுத்தமும் சீரடைகிறது. தோலுக்கும் காய்க்குமிடையிலுள்ள பசை போன்ற பொருளில் விட்டமின்கள் B6,B12உள்ளதால் அடைப்புகள் சரிசெய்யப் படுகிறது.


மொத்தத்தில் தினம் ஒரு மொந்தன் வாழைக்காய் மாரடைப்பிலிருந்து தடுத்து இதயத்தை வாழவைக்கிறது.தொப்பையிருந்தா லும் கரைந்துவிடும். உடல் பருமன் குறையும். சோர்வாகயிருப்பவர்களையும் சுறுசுறுப்பாக்கும் வாழைக்காய் வயதானவர்களுக்கு மிகச்சிறந்த சஞ்சீவி


காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும். உணவு பழக்கம் பழமொழி வடிவில் காட்டுலே புலியும், வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா சீரகம் இல்லா உணவும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.


தன் காயம் காக்க வெங்காயம் போதும் வாழை வாழ வைக்கும் அவசர சோறு ஆபத்து ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும். இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு. ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை. இருமலை போக்கும் வெந்தயக் கீரை. உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி. கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம். குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை.


கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை சித்தம் தெளிய வில்வம். சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி. சூட்டை தணிக்க கருணை கிழங்கு. ஜீரண சக்திக்கு சுண்டக்காய். தலை வலி நீங்க முள்ளங்கி சாறு. தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை. பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி.


மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு. வாந்திக்கு மருந்து மணத்தக்காளி. வாத நோய் தடுக்க அரைக் கீரை. வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய் பருமன் குறைய முட்டைக்கோஸ். பித்தம் தணிக்க நெல்லிக்காய். உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress