குலசேகரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோயில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா உலகளவில் மிகவும் புகழ் பெற்றது.
தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு திருவிழா அக்டோபர் மாதம் 3ந் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் மாதம் 12ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் கடற்கரை வளாகத்தில் நடைபெறுகிறது.
குலசேகரன்பட்டினம் கடலில் புனித நீராடி, சிவப்பு ஆடை அணிந்து, துளசி மாலையுடன் கோவிலுக்கு வந்து கோவில் அர்ச்சகர் கையால் அணிந்து விரதம் இருக்க தொடங்கியுள்ளனர்.