October 23, 2024
நாளால் சுடலைமாடன் ரூபத்தில் காளி தாத்தா

நாளால் சுடலைமாடன் ரூபத்தில் நாங்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த காளி நாடார் இவரை சித்தர் என்பதா? சுடலைமாடன் அருள் பெற்ற பூசாரி என்பதா? எனது பார்வையில் இவர் சித்தராகத்தான் தெரிந்தார். நான் தங்கபாண்டி வாத்தியார் மகன் கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரசங்கமும் ஜெபமும் செய்பவன் இருந்தாலும், இந்து கடவுளின் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு எனது நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இந்துக்களாக இருந்ததனாலே என்னவோ தெரியவில்லை.


காளி தாத்தாவோடு எனக்கு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. சுடலைமாட சுவாமியின் புகழைளைப்பற்றியே தாத்தா எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். நான் சிறுவனாக இருந்த பொழுது மேலக்கோயில் சுடலை மாடசுவாமி கொடை திருவிழாவில் நாளாலி லிருந்து சுவாமி ஆடிவரும் அதாவது காளிதாத்தா ஆடிவரும் அழகை வேடிக்கை பார்க்கவே ஊர் முழுக்க அங்கே கூடி நின்று வேடிக்கை பார்க்கும் அழகை காணவே கண்கள் கோடி வேண்டும்.


முண்ட கண்ண உருட்டிகிட்டு வீச்சருவா கையில வச்சி வளையத்தை சுத்தி சுத்தி ஆடுறது பாக்குறதுக்கு மிகுந்த ஆனந்தமா இருக்கும். அந்த அங்கி குள்ளாவும் மிகுந்த ஈர்ப்புடையதாக இருக்கும். இது ஒவ்வொரு ஆடி கொடை திரு விழாவிலேயும் நான் எனது நண்பர்களுடன் கண்டு ரசித்தது ஒரு வருஷம் மேலகோயில் கொடையும், மறு வருஷம் காரக்குட்டி கோயில் கொடையும் மிகவும் அற்புதமாக நடைபெறும்.

காரைக்குடி கோயில்ன்னு சொன்னதும் என்னடா இது காரகுடின்னு நினைக்காதீங்க. அந்த காலத்துல காரை வீடு கூரை வீடு மச்சி வீடுன்னுதான் சொல்லுவாங்க இவன் கரை வீட்டுக்காரன் இவன் மச்சி வீட்டுக்காரன் இவன் கூரை வீட்டுக்காரன் என்று தான் சொல்லுவாங்க.
நம் சுற்று வட்டாரத்தில் அப்போது உள்ள சுடலை மாடசுவாமி திருமேனிகள் அனைத்தும் மணலை குழைத்தே கட்டப் பட்டிருக்கும்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress