சுண்டக்காமுத்தூர் பாலமுருகன் கோவில் திடலில் C.K.நண்பர்கள் நடத்தும் இந்துக்களின் எழுச்சி விழாவான ஸ்ரீ வீர விநாயகர் சதுர்த்தி பெருவிழா காலை கணபதி ஹோமத்துடன் இனிதே தொடங்கியது.
இதனை தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு உச்சி காலை பூஜை, மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் 1மணிக்கு உச்சி கால பூஜை, மாலை 6மணிக்கு சிறப்பு பூஜைகளும் நடக்க இருக்கிறது.
அதைப்போல் 9ம்தேதி காலை 8 மணிக்கு சிறப்பு பூஜையும், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையை தொடர்ந்து மாலை 4மணிக்கு மாபெரும் விசர்ஜன ஊர்வலம் நடக்க இருக்கிறது. C.K.நண்பர்கள் நடத்தும் இந்துக்களின் எழுச்சி விழாவான ஸ்ரீ வீர விநாயகர் சதுர்த்தி பெருவிழாவில் ஊர் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஸ்ரீ வீர விநாயகர் அருள்பெற அன்புடன் C.K.நண்பர்கள் அழைக்கிறார்கள்.