October 23, 2024
செம்பருத்திமூலிகை  மருத்துவப் பயிற்சி!

வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியம் என பல்வேறு விதங்களில் நமது மண்ணின் மருத்துவம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வீடுகளிலும், வீட்டைச் சுற்றிலும் உள்ள எளிய மூலிகைகளின் வழியாக நானும் என்னால் முடிந்தவரை மண்ணின் மருத்துவத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறேன். இதுகுறித்து முகநூலில் நான் தொடர்ந்து எழுதி வருகிறேன். பலரும் அவர்களது பிரச்சினைகளைச் சொல்லி தீர்வு கேட்டு வருகின்றனர். பலன் பெற்றவர்கள் மட்டுமல்லாமல் பலரும் பாராட்டுகின்றனர்.

இந்நிலையில் மூலிகை மருத்துவத்தை மக்களும் அறிந்துகொண்டு தங்களுக்கு வரும் பிரச்சினைகளுக்கு அவர்களே தீர்வு காணும்விதமாக அவ்வப்போது பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறேன். வெளியூரைச் சேர்ந்த பலரும் தங்கள் ஊர்களில் பயிற்சி நடத்த முடியுமா? என்று கேட்கின்றனர். சென்னையில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் பங்கேற்பதற்கே குறைந்த எண்ணிக்கையில்தான் மக்கள் பதிவு செய்கின்றனர். இதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். வருமானம் ஈட்டும் நோக்கத்தில் இந்தப்பதிவை எழுதுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.

நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் பலரும் பல்வேறுவிதமான நலக்குறைவுகளுடன் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நோய் வரும் முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் சிக்கலான பல்வேறு பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க வழி இருக்கிறது. ஒருவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் சொல்ல நமது மண்ணின் மருத்துவத்தை மேற்கொண்டு இன்று நல்ல நிலையில் உள்ளார்.

புற்றுநோயால் சிரமப்பட்ட இரண்டு பேர் அலோபதி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட அதேவேளையில் தேங்காய்ப்பால், கோதுமைப்புல், முள் சீத்தா பழம் மற்றும் இலைகளை உட்கொண்டு வெகுசீக்கிரம் மீண்டனர். அந்த ஆணுக்கு ஒரு விதை செயலிழந்தநிலையில் அவருக்கு குழந்தைப்பேறு வாய்க்காது என்று மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் எண்ணி மூன்றே மாதத்தில் அவரது மனைவி கரு தரித்தார்.

இத்தகைய முன்னேற்றங்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான் இதுபோன்ற பயிற்சிகளை நடத்தி வருகிறேன். வாய்ப்பு உள்ளவர்கள் பங்கேற்று பலன்பெறலாம்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress