தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்கம் வ உ சி நற்பணி மன்றம் சார்பில் திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா வ உ சி பிறந்தநாள் விழா மற்றும் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வ.உ.சி நற்பணி மன்ற தலைவர் திரு இசக்கிமுத்து அவர்கள் தலைமை ஏற்க வாசிப்பு இயக்க பொருளாளர் திரு.ஜெகநாத பெருமாள் ஆலோசகர் திரு பழனிச்செல்வம் துணைத் தலைவர் செந்திலதிபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாசிப்பு இயக்கத்தின் தலைவர் கோ சந்திரசேகர் அனைவரையும் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வட்டாட்சியர் திரு பாலசுந்தரம் நகர மன்ற துணைத் தலைவர் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் A.B. ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களை பாராட்டி அவர்களுக்கு கேடயம் சான்றிதழுடன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். மேலும் பேச்சு போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வாசிப்பு இயக்கம் சார்பில் அதன் ஆலோசகர்கள் ராமச்சந்திரன் முத்துகிருஷ்ணன் பள்ளிப்பத்து ரவி நூலகர் சுப்பிரமணியன் நாககுமார் சுரேஷ் கார்த்திக் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஆசிரியர் திரு பாரதிராஜா அவர்கள் தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் திரு லிங்கராஜ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வாசிப்பு இயக்கத்தின் செயலாளர் நல்நூலகர் நூலகச் செம்மல் திரு மாதவன் அவர்கள் செய்திருந்தார்.