October 23, 2024
கருத்தரித்தல்… சில உண்மைகள்!

இன்று உலக கருத்தரிப்பு தினம். கருத்தரித்தலில் பல்வேறு பிரச்சினைகள் உள்ள சூழலில் கருத்தரிப்பு தினம் அனுசரிப்பதன் நோக்கம் பற்றி அறிய வேண்டியது அவசியமாகும். பெண்களின் நல்வாழ்வை உறுதி செய்யவும், கருத்தடை சாதனங்கள் மற்றும் குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்கவே இந்த கருத்தரிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது அல்லது கொண்டாடப்படுகிறது.

எத்தனை குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்று பெண்கள் சுயமாக முடிவெடுக்க உலக சுகாதார நல மையம் இந்த கருத்தரிப்பு தினத்தை அனுமதித்துள்ளது. சமீபத்திய தேசிய கணக்கெடுப்பின்படி கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் கருத்தடை சாதனங்களின் பயன்பாடு 8 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. கருத்தரித்தல் தன்மையை நிரந்தரமாக இழக்காமல் கருத்தரித்தலை தள்ளிப்போட விரும்பும் பெண்களுக்கு உதவும்வகையில் தமிழக அரசு `அந்தாரா திட்டம்’ என்ற ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கருத்தரிப்பு குறித்த வேறு சில தகவல்களையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். சமீபகாலமாக திருமணம் செய்யாத பெண்கள் அதிகரித்துள்ளனர். இதனால் கருத்தரிப்பு விகிதம் குறைந்துள்ளது. சிங்கப்பூரில் 2005ஆம் ஆண்டில் இருந்து 2023ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வில் திருமணம் செய்து கொள்ளாத பெண்களின் விகிதம் அதிகரித்துள்ளதும், கருத்தரிப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் பொதுவாக சமீபகாலமாக கருத்தரிப்பு குறைந்துள்ளது கவனிக்க வேண்டியுள்ளது.

ஐ.டி நிறுவனங்களில் வேலைபார்ப்போருக்கு கருத்தரித்தலில் சிக்கல்கள் உள்ளன. எனவே அதுகுறித்து சிந்திக்க வேண்டி உள்ளது. இந்தச் சூழலில் செயற்கை கருத்தரிப்பு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. செயற்கை கருத்தரிப்பை பொறுத்தமட்டில் அதற்கான சிகிச்சைக்கு அதிக செலவாகிறது. குறிப்பாக ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற விரும்புபவர்கள் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆகவே கருத்தரிப்பு என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். கருத்தடை குறித்து அரசு சிந்தித்து வரும் சூழலில் இயற்கையாக கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress