குலசை முத்தாரம்மன்
Spread the love

“உலகுயிர் தழைத்திட மகிடனை வதைத்திட
உமையவள் வருகின்றாள்.
பலபல வேடம் புனைந்தவர் கூடப்
பவனியும் வருகின்றாள்.
கலைமகள், மலைமகள் அலைமகளாகிக்
காட்சியும் தருகின்றாள்.
வேலவன் தாயவள் குலசை முத்தாரம்மையைத்
துதித்திடவாரீரோ!

செந்தமிழ்நாட்டின் தென்கோடியில் திருச்செந்தூ-ருக்கு தெற்கே சுமார் 8 கல் தொலைவில் திருச்செந்தூர்-&கன்னியாகுமரி கடற்கரை நெடுஞ்சாலையில் எழில் தவழும் வங்கக் கடற்கரையில் குலசேகரன்பட்டினம் எனும் இடத்தில் அன்னை முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
அன்னையின் அருள்
அன்னையின் அருள் ஒரு காட்டாற்று வெள்ளம்-போல் ஆனந்த வீச்சுடன் வெளிப்பட்டுக் கொண்டி-ருக்கின்றது. இங்கு அவள் பொற்பாதம்  பற்றிய பக்தர்-களின் வாழ்வை தழைத்துச் செழிப்படையச் செய்கிறாள்.
வெம்மையால் உடலில் தோன்றும் முத்துக்களை ஆற வைப்பதால் முத்தாரம்மன் என்றும், முத்துக்களை ஆரமாக அணிந்தவள் என்பதால் முத்தாரம்மன் என்றும் பலவாறாக அன்னை பெயர் பெற்று விளங்கு-கிறாள். அன்னை முத்தாரம் மன் சுவாமி ஞானமூர்த்திஸ்-வரர் சமேதராய் அம்மையும் அப்பனுமாக ஒன்றாக வீற்றிருக்கும் காட்சி மற்ற திருக்கோயில் களில் காண இயலாத அற்புதகாட்சியாகும். வினை மற்றும் மனநோய் களால் பாதிக்கப்பட்டோர் இங்கு வந்து வழிபட்டு தம் குறைகள் நீங்கிச் செல்கின்றனர்.
இக்கோயிலில் மிகவும் சிறப்பு வாய்ந்த விழாவாக நவராத்திரி விழா இங்கு தசரா விழாவாக  கொண்-டாடப்படு-கிறது. புகழ்பெற்ற தசரா  விழாவிற்கு பெயர்-போன மைசூரை அடுத்து இங்கு தான் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தசரா விழாவிற்கு பின்னணி யாக ஒரு புராணக்கதை கூறப்படு கிறது.
முன்னொரு காலத்தில் வரமுனி என்றொரு முனிவன் தவவலிமை மிக்கவராக வாழ்ந்து வந்தான். எனினும் ஆணவத்-தால் கட்டுண்டு அறிவுக்கண்ணை  இழந்தவனாய்  இருந்-தான். ஒரு நாள் அவனது இருப்பிடம் வழியாக அகத் திய மாமுனிவர் வந்தார். தன்னுடைய ஆணவத்தால் அகத் திய முனிவரை மதிக்கத் தவறியதோடு அவமரியாதை யும் செய்தான். மனம் நொந்த தமிழ் ஞானி அகத்தியர், வர முனியை எருமைத்தலையும், மனித உடலும் பெற்று இறைவி-யினால் அழிவாயாக எனச் சாபமிட்டார். அகத்திய முனிவர் சாபத்தால் வரமுனி எருமைத்-தலையும் மனித உடலும் பெற்று மகிஷாசுரனாக மாறினான்.
மகிஷாசுரனின் கொடுமை
 தனது விடா முயற்சி யாலும், கடுமையான தவத்தினாலும் பற்பல வரங்களைப் பெற்றான். முனி-வராக வாழ்வைத் துவங்கிய வரமுனி, தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தி னான். மகிஷாசுரனின்  இடை யூறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி, மகிஷா சுரனின் கொடுமை களை நீக்கித் தர வேண்டினர். அவர்கள் நடத்திய வேள்வி யில் தோன்றிய அன்னை பராசக்தி, மகிஷாசுரனை அழிக்க புறப்பட்டாள். மகிஷா-சுரனை அழித்த 10ம் நாள் தசரா விழாவாக கொண்-டாடப்படுகிறது. இந்த 10 நாட்களும் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து அன்னை யின் பல அவதாரங்-களை  வேடமாகவும், சிவன், பார்வதி, விஷ்ணு, பிரம்மா, அனுமன், குறவன், குறத்தி, பிச்சைக்காரன், துறவி, அரக்கன்,  பெண்கள், காளி, முருகன், குரங்கு, சிங்கம், புலி, மான், கிளி, காக்கை, கரடி இப்படி பல விதமான வேடங்களை அணிந்து தங்கள் வேண்டுதல்-களை செலுத்துகின்றனர். அது மட்டுமல்லாமல், மாவிளக்கு பூஜை, அங்கபிரதட்சனம், தீச்சட்டி எடுத்தல், வேல் அம்பு குத்துதல், அன்ன தானம் செய்தல் போன்ற பல நேர்த்தி கடன்களை செலுத்து-கின்றனர்.
இக்கோவிலின் சிறப்பு அம்சம்: 
இக்கோயிலில் சுயம்புவாக தோன்றிய சுவாமி அம்பாள் விக்கிரங்களே வழிபாடு செய்யப்பட்டு வந்தன. மைலாடி என்ற ஊரில் ஆசாரி ஒருவரின் கனவில் அம்பாள் தோன்றி தனக்கு சிலை செய்து அதை குலசையிலிருந்து வரும் அர்ச்சகரிடம் கொடுத்தனுப்பு என்று கூற, அதேபோல் அர்ச்சகர் கனவிலும்  தோன்றி ஆசாரி கொடுக்கும் சிலையை சுயம்பு அருகே வைத்து வழிபடு என்று  கூற, அதன்படியே நடந்தது. அம்பாள் தனது திருமேனியை தானே தேர்ந்தெடுத்தாள் என்பது இக்கோவிலின்  சிறப்பு அம்சங்களில் ஒன்று.


 முத்துக்களை ஆற்றி குணப்படுத்துவதால் அன்னை + முத்து+ ஆற்று + அம்மன்= முத்தா(ற்ற)ரம்மன் என்று அழைக்கப்படுகிறார்.
அம்மை நோயினை ‘முத்துப்போட்டுள்ளது’ என்று கூறுவது மரபு. இப்படி முத்துப்போட்டவர்கள் அம்பாளை மனம் உருகி வேண்டினால்  முத்துக்கள் இறங்கி விடுகின்றன என்று நம்பப்படுகிறது.
மேலும், கை, கால், ஊனம், மனநிலை பாதிப்படைந்த-வர்–கள்  வழக்கு, கடன் தொல்லை சொத்துக்களை இழந்தவர்கள் இப்படி எவ்வளவோ பிரச்சினைகளில் சிக்கித் தவிப்போர் இக்கோயில் வந்து அம்மனை வழிபட்டுஅந்த கஷ்டத்தில் இருந்து விடுபட்டு சுபிட்சம் அடைந்து செல்கின்றனர்.

இசக்கி

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress