October 22, 2024
தீராத நோய் விலக,திருமண தடை விலக்கும் மேலையூர் ஸ்ரீநாகாபரணீஸ்வரர்

மேலையூர் ஸ்ரீ நாகாபரணீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), மேலையூர், செய்யூர் வட்டம்,கரம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்இறைவன் : ஸ்ரீ நாகாபரணீஸ்வரர் இறைவி: ஸ்ரீ பெரியநாயகி செங்கல்பட்டு திருப்போரூர் சாலையில் வேங்கூர் வந்து மேற்கு திசையில் சுமார் 4 கி.மி. சென்றால் மேலையூர் கிராமம்.

சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் ஸ்ரீ நாகாபரணீஸ்வரர் என்ற திருநாமத்தோடு காட்சி அளிக்கிறார். அகஸ்தியரால் வழிபட்ட இறைவன் ராகு கேது பரிகார ஸ்தலம். ராகு, கேது, பிரம்மா, மகா விஷ்ணு, அகத்திய முனிவர் ஆகியோர் இக்கோயிலில் சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. எனவே இந்த கோவில் ராகு மற்றும் கேது தோஷங்களுக்கு பரிகார ஸ்தலமாகும். ஒருவர் தொடர்ந்து 5 பிரதோஷங்களில் கலந்து கொண்டால் திருமண தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் சிவன் மற்றும் பெரிய நாயகி அம்மன் குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அம்பாள் திருநாமம் ஸ்ரீ பெரியநாயகி.அபய வரத ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் உள்ளார்.

ஸ்வாமி கருவறை அருகிலேயே ஸ்ரீ விசாலாக்ஷி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் சன்னதி உள்ளது. மற்ற சன்னதிகள் விநாயகர், சுப்பிரமணியர், ஐயப்பன், லட்சுமி, சித்திரகுப்தர், ப்ரம்மா சரஸ்வதி, அகஸ்தியர், லலிதாம்பிகை, திரிபுரசுந்தரி,பைரவர் தாத்தாத்ரேயர் சரபேஸ்வரர் ஆகியன. திருக்குளம் கோயில் பின்புறம் காணப்படுகிறது. ராஜ கோபுரம், கொடிமரம், வசந்த மண்டபம் உள்ளடக்கிய இத்திருக்கோயில் சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயில் வளாகத்திலேயே ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கொண்டுள்ளார்.

கருடன், ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ணர், ஆஞ்சநேயர் சன்னதிகள் இருக்கின்றன. இத்திருக்கோயில் சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. குழந்தை பேறு, தீராத நோய் விலக,திருமண தடை விலக இங்கு உறையும் ஈசன் அருள்புரிகிறார்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress