ஆளுநர் ஆர்.என்.ரவி
Spread the love

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ம் தேதி வரையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்பதால், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. இருப்பினும் ஆளுநர் மாளிகையில் வழக்கமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. சில நாட்களுக்கு முன் குடிமைப்பணிகள் தேர்வு வனப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுடன் ஆளுநர் உரையாடினார்.

இந்நிலையில், நேற்று காலை அவர் 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். உடன் ஆளுநரின் செயலர் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அவர் சொந்த வேலையாக டெல்லி சென்றுள்ளதாகவும் வரும் மே 22-ம் தேதி இரவு சென்னை திரும்புவார் என்றும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress