October 22, 2024
வைகாசி விசாகம் 2024 எப்போது?

வைகாசி விசாகம் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமானின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு, வைகாசி மாதத்தில் (தமிழ் நாட்காட்டியின்படி) அதாவது மே 22ம் தேதி புதன்கிழமை வருகிறது. மே 22ம் காலை 08.18 மணிக்கு துவங்கி, மே 23ம் தேதி காலை 09.43 மணி வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது. இதனால் வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் மே 22ம் தேதி நாள் முழுவதும் விசாகம் நட்சத்திரம் உள்ளதால் அன்றைய தினம் விரதம், வழிபாடு, பூஜைகளை மேற்கொள்ளலாம்.

வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.

பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் முருகப் பெருமானுக்கு சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள். அவர்கள் முருகன் அவதரித்த வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபட்டால், அடுத்த ஆண்டு வைகாசி விசாகத்திற்குள் நிச்சயம் குழந்தைப் பேறு ஏற்படும் என்பது நம்பிக்கை.

வைகாசி விசாகம் நாளில் விரதம் இருப்பவர்கள் இன்றைய தினம் நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு மட்டும் சாப்பிடலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress