October 22, 2024
7 மணிக்கு மேல் உப்பைத் தவிர்க்கவும்!

இந்த வகையான உணவுகளை சாப்பிட அறிவுறுத்த முக்கிய காரணம் இந்த உணவுகள் எளிதில் செரிமானம் அடைந்துவிடும். இரவு நேரத்தில் அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை சாப்பிடுவது உங்கள் தூக்கத்தை கெடுப்பதுடன் அடுத்தநாள் காலையில் தலைவலியையும் உண்டாக்கும்.

ஒருவேளை நீங்கள் இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தால் அதனை தவிர்க்கவும். ஆயுர்வேதத்தின் படி தயிரில் புளிப்பு மற்றும் இனிப்பு என இரண்டு சுவையும்உள்ளது, இதை இரவு நேரத்தில் சாப்பிடும்போது அது உங்கள் உடலில் கப தோஷத்தை அதிகரிக்கும். இரவு நேரங்களில் சாதாரணமாகவே உங்கள் உடலில் கபம் அதிகமாக இருக்கும். இந்த ஏற்றத்தாழ்வால் சுவாச பிரச்சினைகள் மற்றும் சளியை ஏற்படுத்தும்.

எப்பொழுதுமே சாப்பிடும் உணவின் அளவு கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக இரவு நேர உணவில் கட்டுப்பாடு மிகவும் அவசியம். ஆயுர்வேதத்தின் படி நீங்கள் எவ்வளவு குறைவாக சாப்பிடுகிறீர்களோ அந்த அளவிற்கு நீங்கள் நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். நமது செரிமான மண்டலம் இரவு நேரத்தில் வேலை செய்யாமல் இருக்கும், எனவே அந்த நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது உணவை எளிதில் செரிக்க விடாது. ஆயுர்வேத மருத்துவர்களின் கருத்துப்படி இரவில் இரண்டு சிறிய கப் உணவுக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதேபோல உணவுக்கும், தூக்கத்திற்கும் இடையில் 2 அல்லது 3 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.


உங்கள் இரவு உணவில் பருப்பு, கொத்தமல்லி, பச்சை காய்கறிகள், கறிவேப்பிலை போன்ற பொருட்களை உங்கள் இரவு உணவில் சேர்த்துகொள்ளுங்கள். இரவு நேரத்தில் அதிக புரோட்டின்களை சேர்த்து கொண்டு கார்போஹைட்ரேட்டின் அளவை குறைத்து கொள்ளவேண்டும். அதுதான் உங்கள் செரிமான மண்டலத்திற்கு நல்லதாகும்.

இது கொஞ்சம் கடினம்தான். முடிந்த அளவு உங்கள் இரவு உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்த்து கொள்ளவும். வாரத்தில் குறைந்தது மூன்று நாளாவது இதனை செய்ய முயலுங்கள். உப்பு உங்கள் உடலில் உள்ள நீரின் அளவை தக்கவைத்து கொள்ள உதவுகிறது. ஆனால் இரவு நேரத்தில் உடலில் அதிகளவு சோடியம் சேர்த்து கொள்ளும்போது அது இதயம் மற்றும் இரத்த நாளங்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

உங்கள் உணவுக்கு நறுமணத்தை மட்டும் வழங்குவதோடு மட்டுமில்லாமல் மசாலா பொருட்கள் உங்கள் உணவிற்கு ஆரோக்கியத்தையும் சேர்க்கிறது. மசாலா பொருட்கள் உங்கள் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் அதேசமயம் எடை குறைவிற்கும் வழிவகுக்கும். சீரகம், வெந்தயம், ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை போன்ற பொருட்களை உங்கள் இரவு உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் இரவு உணவில் சர்க்கரை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை இனிப்பு சுவை அவசியமாக இருந்தால் சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தவும். தேன் சேர்ப்பது சுவையை மாற்றாது அதேசமயம் எடை குறைப்பு மற்றும் செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது.

சாப்பிடும் போது அதனை மட்டும் செய்ய வேண்டும், டிவி பார்ப்பதையோ அல்லது முக்கியமான விவாதங்களில் ஈடுபவதையோ தவிர்க்கவும். எச்சரிக்கையுடன் சாப்பிடும் போது அது நீங்கள் அதிகம் சாப்பிடுவதை தடுக்கும்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress