October 23, 2024
பெருங்காயத்துல பெரிய மோசடி

காலி பெருங்காய டப்பா… அப்படின்னு ஒரு ஒரு சினிமாப் பாட்டை கேட்டிருப்பீங்க. ஆனா இப்போ நம்ம கடைகள்ல விற்கக்கூடிய பல பெருங்காயம் உண்மையிலயே பெருங்காயம்தானான்னு சந்தேகமா இருக்கு. பொதுவா பெருங்காயத்தை சமையல்ல சேர்த்தா வாய்வுக்கோளாறை சரி பண்ணும். இதனால எல்லாரும் அதை ஒரு மருந்தா நினைச்சிட்டு அன்றாடச் சமையல்ல சேர்க்கிறதை வழக்கமா வச்சிருக்கோம். அதுலயும் முக்கியமா கூட்டுப் பெருங்காயம்ன்னு ஒண்ணு விப்பாங்க. உண்மையிலயே அது கூட்டுப் பெருங்காயம்தானா?

பெருங்காய கம்பெனிக்காரங்க பலபேர் ஒரு வகை பிசினை இதுல பயன்படுத்துறாங்க. அரேபிய பிசின்… அப்படின்னு ஒண்ணு இருக்கு. அதோட கொஞ்சம் மைதா மாவு, பெருங்காய வாசனைக்காக எசென்ஸ் எல்லாத்தையும் சேர்த்து இந்த கூட்டுப் பெருங்காயத்தை தயார் பண்றாங்க. இந்த மூணுல எதுவுமே பெருங்காயத்துக்கு சம்பந்தமில்லாத ஒரு பொருள்; அத புரிஞ்சுக்கோங்க. இந்த மோசடியை நமக்குத் தெரியாம செய்றாங்க. ஆனா சத்தம் போட்டு அதை விற்பனை பண்ணிட்டு இருக்காங்க. இன்னும் சொல்லப்போனா அதுல என்னென்ன சேர்க்கிறோம்னு கொட்டை எழுத்துல எழுதி வச்சி விக்கிறாங்க. ஆனா, நாம அதை கவனிக்காம வாங்கி பயன்படுத்துறோம். அதனால நாம பயன்படுத்தக்கூடிய உணவுப்பொருள்கள்ல என்னதான் இருக்குன்னு தெரிஞ்சிட்டு வாங்கி பயன்படுத்துங்க.

இதுமாதிரி மோசடி பெருங்காயத்தை வாங்கி தொடர்ந்து பயன்படுத்திட்டு வந்தா வாய்வுத்தொல்லை சரியாகுறதுக்குப் பதிலா வாய்வுத்தொல்லையை அதிகப்படுத்தும். அதுமட்டுமில்ல நரம்புத் தளர்ச்சி உண்டாகுறதோட வேற சில பிரச்சினைகளும் உண்டாகும். அதனால உணவு விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கணும். உங்கள் தட்டுல இருக்கிறது உணவா?விஷமா?ங்கிறதை நீங்கதான் முடிவு பண்ணணும்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress