October 22, 2024
ராமேஸ்வரம் முதல் ஸ்ரீரங்கம் வரை ஆலய தூய்மைப்பணி..ஆளுநர் ரவி நெகிழ்ச்சி

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய ஆலயங்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார். ராமேஸ்வரத்திலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் தூய்மை பணி செய்துள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி. ஆலயங்களை தூய்மை செய்வது என்பது அற்புதமான சேவை. அந்த பணியை சமீபத்தில் ராமர் ஆலயத்தில் தொடங்கினார் பிரதமர் மோடி. அவரைத் தொடர்ந்து பலரும் ஆலயத்தூய்மை பணியை செய்து வருகின்றனர். தமிழக ஆளுநர் ஆளுநர் ஆர்.என். ரவி, பகவான் ஸ்ரீராமர் தொடர்புடைய ஆலயங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.

முதல்வர் அவர் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணிக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்ததோடு அந்த ஆலயத்தின் சிறப்புகளை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராமேஸ்வரம் அருகே உள்ள திருப்புல்லாணியில் தசரத மன்னர் புத்திர காமேஷ்டி பூஜை மற்றும் தர்பசயனத்தில் பிரபு ஸ்ரீ ராமர் இருக்கும் ஸ்ரீ ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயிலில் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன்.

“ராமேஸ்வரம் அருகே உள்ள திருப்புல்லாணியில் தசரத மன்னர் புத்திர காமேஷ்டி பூஜை மற்றும் தர்பசயனத்தில் பிரபு ஸ்ரீ ராமர் இருக்கும் ஸ்ரீ ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயிலில் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன். இங்கு தர்பையில் சயன கோலத்தில் ஓய்வெடுத்தபோதுதான் பிரபு ஸ்ரீ ராமர், இலங்கைக்கு பாலத்தை கட்ட முடிவெடுத்தார். இப்பகுதி முழுவதும் ஸ்ரீ ராமரின் புராண கதைகளால் நிரம்பியுள்ளது. அயோத்தியில் பிரமாண்டமான பிரபு ஸ்ரீராமர் கோயிலின் திறப்பு விழா ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் உள்ளூர் மக்களிடையே முழு அளவிலான உற்சாகம் நிலவுகிறது. நமது பன்முக மக்கள் மற்றும் இடங்களுக்கு மத்தியில் ஒரே குடும்பம் என்ற தீவிர உணர்ச்சிப் பிணைப்பு, பாரதத்தின் எண்ணத்தையும் அடையாளத்தையும் உருவாக்கி நிலைநிறுத்துகிறது.” – ஆளுநர் ரவி

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress