October 22, 2024
அயோத்தி இராமனுக்கும் தமிழகத்துக்கும் என்ன தொடர்பு..?

இந்தியாவிலேயே உத்திரபிரதேசத்தை அடுத்து இராமனுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்ட மாநிலம் என்றால் அது தமிழகம் தான். இராமர் வாழ்ந்ததற்கான பிரதான அடையாளமாகக் கருதப்படும் இராமர் பாலம் தமிழகத்தில் தான் இருக்கிறது. இராமாயண காலத்தில் வாழ்ந்து இராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் ஒரு தமிழர். சீதையை மீட்க இராமனும் அவரது படைகளும் நீண்ட காலம் தங்கிய இடம் தமிழகமே.தமிழகத்தில் இருக்கிற நூற்றுகணக்கான ஊர்களின் பெயர்கள் இராமாயண சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்பட்டவையே.

இராமர் இராவணனை சம்ஹாரம் செய்துவிட்டு பாவத்தைப் போக்க சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிப்பட்ட இடம் இராமேஸ்வரம். இராமர் வனவாசத்தில் இருந்த போது தனது தந்தைக்கு முதல் தர்ப்பணம் கொடுத்த இடம் திலதர்ப்பணபுரி. இராமனுக்காக உயிரை தியாகம் செய்த ஜடாயூ பறவை இறந்து புதைக்கப்பட்ட இடம் வைதீஸ்வரன் கோவில். இராமனின் குழந்தைகள் இலவனும், குஷனும் தங்கி வளர்ந்த இடம் தமிழகம். சோழர்களின் முன்னோன் இராமன் என்பதற்கு பல கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன, அதன் காரணமாகவே தமிழில் கம்பர், ஒட்டக்கூத்தர் என பல புலவர்களால் போட்டி வைத்து இராமாயணம் பிரமாண்டமாக எழுதப்பட்டது. இராமர் கோவில் வழக்கில் 93 வயதில் நீதிமன்றத்தில் போராடி வழக்கில் வெற்றியை நிலைநாட்டி, இராமஜென்ம பூமியை மீட்ட வழக்கறிஞர் பராசரன் நம்ம ஸ்ரீரங்கத்துக்காரர். அன்றும் இன்றும் என்றுமே தமிழகமும் இராமனும் பிரிக்கவே முடியாத இரண்டு இணைகள்…
ஜெய்_ஸ்ரீராம்..

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress