சென்னை சர்வதேச அளவில் நடிகர் ரஜினிகாந்தின் லால் சலாம் படம் திரையரங்குகளில் நேற்றைய தினம் ரிலீஸ் ஆகியுள்ளது. அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மூன்றாவது படமாக வெளியாகி உள்ள லால் சலாம் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. பாட்ஷா படத்திற்கு பிறகு ரஜினிக்கு இந்த படம் சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும் அவரது கேரக்டர் மிகவும் அழுத்தமாக அமைந்துள்ளதாகவும் கமெண்ட் செய்யப்பட்டு வருகின்றன.

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். விஷ்ணு விஷாலுக்கு இந்த படத்தில் முக்கியமான கேரக்டர் என்ற நிலையில் அவரது ஜோடியாக நடிகை அனந்திகா சனில்குமார் நடித்துள்ளார்.

இவர் முன்னதாக தெலுங்கில் ராஜமுந்திரி ரோஸ்மில்க் படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து மேட், விக்ரம் பிரபுவுடன் ரெய்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ரஜினியுடன் இணைந்து லால் சலாம் படத்தில் நடித்துள்ளது குறித்து உற்சாகமாக பேட்டியளித்துள்ளார். தமிழ்நாட்டில் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவை ரசிகர்களுடன் இணைந்து பார்த்தது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாகி அதிரிபுதிரி வெற்றியை கொடுத்துள்ளது. இந்த படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து உற்சாகமாக அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவரது நடிப்பில் நேற்றைய தினம் லால் சலாம் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் கேமியோ கேரக்டரில் நடித்திருந்தாலும் அவருக்கு படத்தில் மொய்தின் பாய் என்ற அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளது. இந்த படத்தை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். முன்னதாக 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது படமாக வெளியாகி உள்ளது லால் சலாம்.

இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் ரஜினிகாந்த்திற்கு கேமியோ கேரக்டர் அமைந்துள்ளது. தேர்த்திருவிழா மற்றும் கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாக முன்னதாக படத்தின் இசை வெளியீட்டின்போது படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. நல்ல வசூலையும் குவித்து வருகிறது. படத்தில் விஷ்ணு விஷாலுக்கு முக்கியமான கேரக்டர் அமைந்துள்ள நிலையில் படத்தில் அவருக்கு ஜோடியாக அனந்திகா சனில்குமார் நடித்துள்ளார்.

அவர் முன்னதாக தென்னிந்திய அளவில் சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ராஜமுந்திரி ரோஸ்மில்க் படத்தில் அறிமுகமான அனந்திகா, தொடர்ந்து மேட், மற்றும் விக்ரம் பிரபுவுடன் ரெய்ட் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கொஞ்சும் தமிழில் பிலிமிபீட் தமிழுக்காக பேசிய அவர், இதுபோனற் ஒரு நல்ல ஸ்டோரியில் தானும் உள்ளது உற்சாகத்தை கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். ரஜினிகாந்தின் படத்தை சென்னையில் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவாக முதல்முறையாக பார்த்ததாகவும் தானும் உற்சாகமடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress