October 22, 2024
தண்ணீர் சம்ப் ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட்

எழுபது வயதான மதுரை அருணாச்சலம் ஆண்டுதோறும் 16 ஆயிரம் லிட்டர் மழை நீரை சேகரித்து பின்பு அந்த நீரை தனது அன்றாடத் தேவைக்காக பயன்படுத்தி வருகிறார்.

நிலத்தடி நீர் மற்றும் இயற்கை வளங்கள் பற்றாக்குறையின் காரணமாக, நம் நாட்டு மக்கள் அனைவரும் தண்ணீரை உபயோகப்படுத்துவதிலும் அதை சேமிப்பதிலும் அதிக கவனம் செலுத்தவேண்டும். எழுபது வயதான மதுரையைச் சேர்ந்த அருணாச்சலம் அதை தான் செய்து வருகிறார். இந்த முன்னாள் தலைமைப் பொறியாளர் கடந்த 30 ஆண்டுகளாக மழைநீரைப் சேமித்து வருகின்றார். ஒவ்வொரு ஆண்டும் 16,000 லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்துகிறார்.

ஆண்டுதோறும் சேமிக்கப்படும் 16,000 லிட்டர் தண்ணீரில், அவரது குடும்பம் 8,000 லிட்டர் தண்ணீரை மட்டுமே செலவு செய்கின்றனர். மீதமுள்ள தண்ணீரை அவர்களின் வீட்டில் குடியிருப்பவர்கள் பயன்படுத்துகிறார்கள். 1985 ஆம் ஆண்டில் அருணாச்சலம் தனது வீட்டை கட்ட முடிவு செய்தபோது, தண்ணீர் சேமிப்பையும் துவங்கியுள்ளார். கட்டுமானத்தின் ஒரு பகுதியாக, ஈர்ப்பு விசை என்று ஒரு நுட்பத்தின் மூலம் மழைநீரை சேமிக்கத் தேவையான உள்கட்டமைப்பையும் அவர் கட்டி முடித்தார். இந்த செயல்முறையின் மூலம் மழை நீர் அவர் வீட்டின் கூரையிலிருந்து இறங்கி நிலத்திற்குச் சென்று நிலத்தடி நீரை மீண்டும் மீள்நிரப்பு செய்கிறது.

NDTV-க்கு அளித்த பேட்டியில் அருணாச்சலம்,

“தண்ணீரை வடிகட்டும் வடிகட்டி அறை கட்டப்பட்டுள்ளது. மழைநீரானது மணல், கரி, கூழாங்கற்கள் எனும் மூன்று கட்ட வடிகட்டல் முறையில் வடிகட்டப்படுகிறது. ஈர்ப்பு விசையின் உதவியுடன் வடிகட்டப்பட்ட நீர் நிலத்தடிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அடித்தளத்தில் இருக்கும் தண்ணீரை மோட்டார் பம்புகள் வழியாக திரட்டி மேல்நிலை தொட்டிகளில் நிரப்பப்படுகின்றன,” என்று விளக்கினார்.

வடிகட்டும் தொட்டியில் கூழாங்கற்கள், மணல் மற்றும் கரித்தூள் பவுடர் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். மேலும், மேல் நோக்கிக் கட்டப்பட்டிருக்கும் சேமிப்பு தொட்டியிலிருந்து வீட்டில் சமையலறைக்குத் தேவையான நீரை இதன் மூலம் வழங்கலாம். “நான் சேமித்த நீரை சமையல் வேலைகள் மற்றும் குடிநீராக பயன்படுத்தப்படுகிறோம்,” என்றார் அருணாச்சலம்.

மேலும் அவர் கூறுகையில், மேலே கட்டப்பட்டிருக்கும் தொட்டி சமையலறையின் ஏ.டி.எம் இயந்திரம் போன்றும், மற்றும் அதிலிருந்து வரும் பைப் குழாய் டெபிட் கார்டு போன்றும், உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும், என்கிறார். இதை எந்த நேரத்திலும் பயன்படுத்திக்கொள்ளலாம். தண்ணீர் சம்ப் ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட் போன்றதுமாகும். நிலத்தடி நீரை இவ்வாறு மறுசுழற்சி செய்து பக்கத்தில் வசிக்கும் மக்களுக்கு நல்ல குடிநீரைப் பெற உதவுவதன் மூலம் இது ஒரு சமூக சேவையாகவும் பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress