October 22, 2024
இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

உங்கள் தேவைகள் நிறைவேறும். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும். கணுக்காலில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு பின்னர் நீங்கும். விமர்சனப் பேச்சுக்கள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தோற்றப் பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைப்பது நல்லது. வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். சுகம் நிறைந்து காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு.

அதிர்ஷ்ட எண் : 5 (ஐந்து)

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐அஸ்வினி : பொறுப்புகள் கூடும்.

⭐பரணி : அலைச்சல் ஏற்படும்.

⭐கிருத்திகை : உழைப்பு அதிகரிக்கும்.

🍁ரிஷபம்

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அலைச்சலுக்கு பின் நிறைவேறும். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாகனத்தில் பொறுமை வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சகிப்புத் தன்மையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு.

அதிர்ஷ்ட எண் : 7 (ஏழு)

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐கிருத்திகை : அலைச்சல் உண்டாகும்.

⭐ரோகிணி : பொறுமை வேண்டும்.

⭐மிருகசீரிஷம் : சோர்வுகள் உண்டாகும்.

🍁மிதுனம்

உங்களுடைய மனதில் இதுவரை இருந்து வந்த கவலைகள் குறையும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். நெருக்கமானவர்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் இலாபம் ஏற்படும். உயர் அதிகாரிகளுடன் நட்பு மேம்படும். சமூகப் பணிகளில் உயர்வு உண்டாகும். அசதி குறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.

அதிர்ஷ்ட எண் : 8 (எட்டு)

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐மிருகசீரிஷம் : கவலைகள் குறையும்.

⭐திருவாதிரை : மதிப்பு கூடும்.

⭐புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.

🍁கடகம்

   உங்கள் குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். முடிவுகளில் அனுபவ அறிவு வெளிப்படும்.  புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் விலகும். உங்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். பொறுப்புகள் மேலும் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள் 

அதிர்ஷ்ட திசை : வடக்கு.

அதிர்ஷ்ட எண் : 4 (நான்கு)

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐புனர்பூசம் : அனுபவம் வெளிப்படும்.

⭐பூசம் : அனுசரித்து செல்லவும்.

⭐ஆயில்யம் : குழப்பம் விலகும்.

🍁சிம்மம்

புதிய பொறுப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த வருத்தங்கள் நீங்கும். தனவரவுகள் தேவைக்கேற்ப கிடைக்கும். இழுபறியாக இருந்து வந்த சில வேலைகள் எளிதில் முடியும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் மறையும். செலவுகள் அதிகரிக்கும். பணிச்சுமை  நிறைந்து காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு.

அதிர்ஷ்ட எண் : 1 (ஒன்று)

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐மகம் : வருத்தங்கள் நீங்கும்.

⭐பூரம் : மகிழ்ச்சியான நாள்.

⭐உத்திரம் : போட்டிகள் மறையும்.

🍁கன்னி

உத்தியோகத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். புதிய முடிவுகளில் விவேகம் வேண்டும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வாடிக்கையாளர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு பின்னர் நீங்கும். விவேகம் வேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு.

அதிர்ஷ்ட எண் : 7 (ஏழு)

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.

⭐உத்திரம் : விவேகம் வேண்டும்.

⭐அஸ்தம் : ஏற்ற, இறக்கமான நாள்.

⭐சித்திரை : புரிதல் ஏற்படும்.

🍁துலாம்

வியாபாரத்தில் இலாபம் உண்டாகும். உங்களுடைய பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணையின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நண்பர்களின் வருகை உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் சீராகும். செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சில வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் விலகும். புகழ் நிறைந்து காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு.

அதிர்ஷ்ட எண் : 4 (நான்கு)

அதிர்ஷ்ட நிறம் : வைலட் நிறம்.

⭐சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

⭐சுவாதி : ஆரோக்கியம் சீராகும்.

⭐விசாகம் : தடைகள் விலகும்.

🍁விருச்சிகம்

சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கூடும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தடைபட்ட ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்து வந்த கவலைகள் குறையும். கால்நடைகள் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். சவாலான பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். வெற்றிகள் நிறைந்து காணப்படும். கலகலப்பு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு.

அதிர்ஷ்ட எண் : 9 (ஒன்பது)

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐விசாகம் : மதிப்பு கூடும்.

⭐அனுஷம் : சாதகமான நாள்.

⭐கேட்டை : ஈர்ப்பு அதிகரிக்கும்.

🍁தனுசு

குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் கல்வியில் தெளிவு ஏற்படும். நீண்ட நாள் தெய்வீக பிரார்த்தனைகள் நிறைவேறும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். கலைத்துறைகளில் ஆர்வம் ஏற்படும். முயற்சி நிறைந்து காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.

அதிர்ஷ்ட எண் : 7 (ஏழு)

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐மூலம் : தெளிவு ஏற்படும்.

⭐பூராடம் : சிக்கனமாக செயல்படுவீர்கள்.

⭐உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.

🍁மகரம்

உங்களுடைய செயல்பாடுகளில் மாற்றம் காணலாம். நினைத்த பணிகளில் காலதாமதம் உண்டாகும். உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் சில சலுகைகளால் இலாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். உங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். ஊக்கம் நிறைந்து காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு.

அதிர்ஷ்ட எண் : 5 (ஐந்து)

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

⭐திருவோணம் : ஆதாயம் உண்டாகும்.

⭐அவிட்டம் : பொறுப்பு கிடைக்கும்.

🍁கும்பம்

உயர்கல்வி சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். இலாபம் நிறைந்து காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு.

அதிர்ஷ்ட எண் : 3 (மூன்று)

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

⭐சதயம் : பிரச்சனைகள் குறையும்.

⭐பூரட்டாதி : வெற்றிகரமான நாள்.

🍁மீனம்

புதிய முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். மனதளவில் இருந்து வந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். உங்கள் தனிப்பட்ட திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு.

அதிர்ஷ்ட எண் : 7 (ஏழு)

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐பூரட்டாதி : கவலைகள் மறையும்.

⭐உத்திரட்டாதி : சாதகமான நாள்.

⭐ரேவதி : மாற்றங்கள் உண்டாகும்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress