October 23, 2024
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித்திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 29ம்தேதி வரை11 நாட்கள் நடக்கிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5மணிக்கு நடை திறக்கப்பட்டு உகப் படிப்பு, பணிவிடை நடக்கிறது தொடர்ந்து காலை 6மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. வள்ளியூர் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றுகிறார். தொடர்ந்து அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி பவனி வருதல்,அன்ன தர்மம் வழங்குதல், மதியம் 12 மணிக்கு உச்சி படிப்பு , பணிவிடை,அன்ன தர்மம் வழங்குதல் மாலை 4 மணிக்கு உகப் படிப்பு, பணிவிடை மாலை 5 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி வருதல் தொடர்ந்து அன்னதர்மம் இனிமம் வழங்குதல் நடக்கிறது


விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மாலையில் உகப் படிப்பு பணிவிடை, மதியம் உச்சி படிப்பு பணிவிடையும் காலை, மதியம், இரவு அன்னதர்மம் இனிமம் வழங்குதல், மாலையில் புஷ்ப வாகனம், மயில் வாகனம்,அன்னம் வாகனம்,சர்ப்ப வாகனம்,கருட வாகனம், குதிரை வாகனம் ஆஞ்சநேயர் வாகனம்,இந்திர வாகனம்,காளை வாகனம் என பல்வேறு வாகன பவனியும் நடக்கிறது. 8ம்திருவிழா மாலை 5மணிக்கு அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கடற்கரையில் கலிவேட்டை நடக்கிறது.


விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 11ம்திருவிழாவான இம் மாதம் 29ம்தேதி மதியம் 12.05மணிக்கு நடக்கிறது.தேரோட்டத்தை தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமையில் களக்காடு சுந்தர பாகவதர் குமாரர் பொறியாளர் ஜெய ராமன் முன்னிலையில் தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை சார்பில் தலைவர் தர்மர், செயலாளர் பொன்னுத்துரை, துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் கோபால் நாடார், இணைத் தலைவர்கள் விஜயகுமார், செல்வின்,பால்சாமி, ராஜதுரை,இணை செயலாளர்கள் ராதா கிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், வரதராஜ பெருமாள்,சுதேசன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress