October 23, 2024
தூத்துக்குடி தெற்கு மாவட்டதமிழ்நாடு வணிகர் சங்க முப்பெரும் விழா

மாநில தலைவர் விக்கிரம ராஜா பங்கேற்பு…… தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பழைய பொருள் வியாபாரிகள் சங்கம் ,திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதி அலுவலக திறப்பு விழா, கொடியேற்றி விழா மற்றும் சங்க பெயர் பலகை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா உடன்குடி செட்டியா பத்து ஆண்டி விளை வாக விளை ரோட்டில் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு தலைவர் இன்பராஜ் தலைமை வைத்தார். துணைத் தலைவர் முருகேசன், செயலாளர் சுபாஷ், துணைச் செயலாளர் ஞானதினேஷ், பொருளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று பேசினர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.


விழாவில் பழைய பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயக்குமார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர், சென்னை மாநகர செயலாளர் சேதுராமன், பொருளாளர் இருதயராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் கண்ணன், தெற்கு மாவட்ட பொருளாளர் அருணாச்சலம், தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கவாஸ்கர், உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் அம்ரோஸ், பழைய பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.


விழாவில் சாயர்புரம் வணிகர் சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் பொன்ராஜ் பொருளாளர் ராஜா டேவிட் ,மாவட்ட துணை தலைவர் சின்னத்துரை, பரமக்குடிச்சி வியாபாரிகள் சங்க தலைவர் ஆசிர்வாதம், மாவட்ட இளைஞரணி ஜெயசீலன் ,ஆறுமுக பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress